|
பிரியமானவர்களே!
நம் கர்த்தராகிய இயேசு கிரிஸ்த்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் உறவுகள் விட்டு கடல் தாண்டி பணம் சம்பாதிக்க வந்தோம். வ்ந்த இடத்தில் அந்நியர்களாய் இருந்த நமக்கு தேவன்
அவருடைய தயவான கிருபயினாள் அவருடய குடும்பதில் நம்மை அங்கத்தினர்களாய் செர்த்துக்கொண்டார். நாம் இந்திய தேசத்தில் சந்தித்திராத நம்மை
இந்த சிங்கப்பூரில் ஜிப்ஸ் ஃபெல்லொஸிப்பின் மூலம் நம்மை ஒரு புதிய உறவுக்குள்ளாகா இணைத்து வருகிறார்.
இன்று கிரிஸ்த்துவம் அனுபவம்,அற்புதம்,அடையாளம், குனமாக்குதள்,செழிப்பு உபதேசம், பில்லி சூனியம் எடுத்தல் என திசை மாறி செல்லும்போது, வேதமே ஆதாரமாக, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலோடு இந்த ஐக்கியமானது ஒவ்வொரு சனிக்கிழமைகளிள் மாலை 0800 இருந்து 0930 வரை நடைபெரும். ஜெபம்,பாடல்கள்,வேத வாசிப்பு,சாட்ச்சி பகருதல், பிரசங்கம், தேவ ஆசிர்வாதம், அறிவிப்புகள் மற்றும் சிற்றுண்டி முதலியவைகள் இடம்பெரும்.
இந்த ஐக்கியமானது 1997ஆண்டு நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. யீரே பைபிள் பிரஸ்பட்டீரியன் திருச்சபை உதவியுடன் இயங்கி வருகிறது. போதகர் திரு.வான் அவர்கள் மிகுந்த அக்கறையுடன்
ஒவ்வொரு வாரமும் வெகு சிரத்தையுடன் தேவ செய்திகளை அளித்து வருகிரார். அவர் ஒரு சீனராய் இருந்த போதும், தேவன் யூதரான பவுலை புரஜாதியினருக்காய் தெரிந்து கொண்டதுபோல், இவரை தமிழர்களுக்காய் தெரிந்து கொண்டிருக்கிறார். கடலையும் காற்றையும் அதட்டவெ கற்றுக்கொண்ட நமக்கு அதை எதிர்த்து நம் வழ்க்கை படகை எப்படி ஓட்ட தேவன் விரும்புகிறார் என்பதை காற்றுக்கொள்ள வாருங்கள்.
LOCATION OF JIBS FELLOWSHIP

|